search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்கார சம்பவம்"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
     
    இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase #CBI
    சென்னை:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் பொள்ளாச்சிக்கு சென்று விசாரிக்கின்றனர். 

    இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ.க்கு  வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரின் காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. #PollachiAbuseCase
    கோவை:

    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அவனது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்.

    இந்த விசாரணை காலம் முடிவடைந்த நிலையில் கோவை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவனை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    இதைதொடர்ந்து, ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறையில் திருநாவுக்கரசும் அடைக்கப்பட்டான்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் காவலை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் காணொலி காட்சி மூலம் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது, நீதிபதி நாகராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாலியல் வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் திருநாவுக்கரசு, அவரது நண்பர்கள் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி.ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், இதன் காரணமாக ஒருவரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்றுமுன்தினம் மாலை பிறப்பித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில், கைதான திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அரசாணையில் இடம் பெற்றுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #PollachiCase #mkstalin
    சென்னை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். 
     
    இதில் தொடர்புடைய சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

    இதற்கிடையே, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அரசாணையில் இடம் பெற்றுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு. இனி யாரும் புகார் கொடுக்கக் கூடாது என மிரட்டுகிறதா?

    குற்றவாளிகளைக் காப்பாற்ற தொடரும் ஆளும் தரப்பின் கபட நாடகம் இது என பதிவிட்டுள்ளார். #PollachiCase #mkstalin
    பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். 
     
    இதுதொடர்பாக  சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரிலும் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    ×